விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசே பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசே பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2023-02-17 18:43 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அதிக பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தையில் அதன் கொள்முதல் விலை அண்மைக்காலங்களில் இல்லாத அளவில் குவிண்டாலுக்கு ரூ.7,500 என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ பருத்திக்கான உற்பத்திச்செலவு ரூ.100-க்கும் மேல் ஆகிறது. விவசாயிகள் கடன் வாங்கித்தான் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். உற்பத்திச்செலவை விட குறைந்த விலைக்கு பருத்தியை விற்க நேரிட்டால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு மீளமுடியாத கடன் வலையில் சிக்கிக்கொள்வார்கள். இப்போது கொள்முதல் விலை குறைந்தாலும் விற்பனை விலை அதிகமாகவே உள்ளது. அதனால் வணிகர்கள் மட்டுமே லாபம் அடைகின்றனர். தமிழ்நாடு அரசே பருத்தியை கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் விற்பனை விலை உயராது. எனவே, ஒரு கிலோ பருத்தியை குறைந்தது ரூ.125 என்ற விலையில் நேரடியாக கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்