ரியல் எஸ்டேட் தரகர் திடீர் சாவு

கயத்தாறு அருகே ரியல் எஸ்டேட் தரகர் திடீர் சாவு

Update: 2022-05-31 17:41 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. இவருடைய மகன் கணேசமூர்த்தி (வயது 42). இவர் ரியல் எஸ்டேட் தரகராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கணேசமூர்த்தி மது குடித்து விட்டு வந்து வீட்டில் படுத்து இருந்தார். அதிகாலையில் அவரது மனைவி சின்னபொண்ணு கணவரை எழுப்பியபோது மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தனர். பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் திடீரென இறந்தார். இறந்து போன கணேசமூர்த்திக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதுபற்றி கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்