குளிக்கச்சென்ற சப்-இன்ஸ்பெக்டர், கண்மாயில் பிணமாக மீட்பு

குளிக்கச்சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கண்மாயில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-12-06 20:16 GMT

காரியாபட்டி,

குளிக்கச்சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கண்மாயில் இருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சப்-இன்ஸ்பெக்டர்

சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது55). இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று வீரசோழன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள கண்மாயில் கருப்பையா குளிக்க சென்றார்.

நீரில் மூழ்கி சாவு

நீண்ட நேரமாகியும் அவர் போலீஸ் நிலையத்திற்கு திரும்ப வரவில்லை. இதையடுத்து சக போலீசார் அவரைத்தேடி கண்மாய்க்கு சென்றனர். அப்போது கரையில் கருப்பையாவின் சட்டை, செல்போன் ஆகியவை கிடந்தன. பின்னர் போலீசாரும், அப்பகுதி மக்களும் கண்மாயில் இறங்கி அவரை தேடினர். அப்போது கருப்பையாவின் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்