சப்-இன்ஸ்பெக்டர் தகுதித்தேர்வை 3164 பேர் எழுதுகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தகுதித்தேர்வை 3164 பேர் எழுதுகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 25, 26 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தகுதி மற்றும் எழுத்துத்தேர்வு நடைபெறவுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி, வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 3 மையங்களில் 3164 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தேர்விற்கான ஏற்பாடுகள் மற்றும் தேர்வு நடத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் முத்து மாணிக்கம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தேர்வு மையங்களை திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பார்வையிட்டு, தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜன், அருண் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.