ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் திருட முயற்சி
ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் திருட முயற்சி நடந்தது.
நெல்லை ரெட்டியார்பட்டி கணபதி நகரை சேர்ந்த அர்ச்சுனன் மகன் விநாயகம் (வயது 41). இவர் அந்த பகுதியில் ஸ்டூடியோ வைத்து உள்ளார். சம்பவத்தன்று விநாயகம் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் நடந்த கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருட்டுபோகவில்லை என தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அவர் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.