மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

Update: 2023-09-10 13:17 GMT

திருப்பூர்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் மூலம் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2021-ம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் தவறாக, அநாகரீகமான நடத்தை, மிரட்டல், ஒருவரை மனம் மற்றும் உடல் ரீதியாக மற்றும் வாய்மொழியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவர்.

விடுதியில் தங்க முடியாது. கல்வி உதவித்தொகை நிறுத்தப்படலாம். தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது. போலீசார் மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுத்து வழக்கு பதியப்படும். கல்லூரியில் ராக்கிங் வேண்டாம் என்று சொல்லுங்கள், ராக்கிங் தண்டனைக்குரிய குற்றம், ராக்கிங்கில் ஈடுபடாதீர்கள். ராக்கிங் நடந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு பலகையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

=====

Tags:    

மேலும் செய்திகள்