மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்த கல்லூரி மாணவி படுகாயம்

கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்த கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-14 18:00 GMT

ராயக்கோட்டை

கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியை சேர்ந்த 18 வயது மாணவி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி செல்வதற்காக மாணவி மஞ்சளகிரி பஸ் நிறுத்தத்தில் நின்று இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மாணவியை கல்லூரியில் அழைத்து சென்றார். ஆனால் கல்லூரியில் மாணவியை இறக்கி விடாமல் அந்த வாலிபர் வேகமாக சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்தார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்