கண்மாயில் மூழ்கி மாணவன் பலி

மீன்பிடிக்க சென்ற ேபாது கண்மாயில் மூழ்கி மாணவன் பலியானார்.

Update: 2022-08-09 19:04 GMT

சிவகாசி, 

மீன்பிடிக்க சென்ற ேபாது கண்மாயில் மூழ்கி மாணவன் பலியானார்.

கண்மாயில் மூழ்கினான்

சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் காளிராஜன். இவரது மகன் செல்லப்பா (வயது 14). இவன் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் தொழிற்பேட்டை அருகில் உள்ள கண்மாயில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாரதவிதமாக செல்லப்பா கண்மாயில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

உடனே அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மாணவன் பலி

அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர், மாணவன் செல்லப்பா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து காளிராஜன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் கண்மாயில் மூழ்கி இறந்த சம்பவம் ரிசர்வ்லைன் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்