அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம்
பரங்கிப்பேட்டை பகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்காவிட்டால் அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் என்று மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ் அறிவித்துள்ளாா்.
புவனகிரி:
கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் செல்வ மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் அனல் மின் நிலையத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. ஆனால் பரங்கிப்பேட்டை பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. வெளிமாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம்(அக்டோபர்) முதல் வாரத்தில் பா.ம.க. சார்பில் அனல் மின் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.