கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம்

உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருக்கும் போராட்டம் மனைப்பட்டா வழங்க கோரிக்கை

Update: 2022-12-30 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 176 பேருக்கு கடந்த 2010-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை அளவீடு செய்து மனைப்பட்டாவை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீட்டு மனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தாசில்தார் மணிமேகலை வருகிற 20-ந் தேதிக்குள் நிலத்தை அளவீடு செய்து தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்