டெம்போவில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசம்
தக்கலை அருகே டெம்போவில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
தக்கலை:
தக்கலை அருகே டெம்போவில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
தக்கலை அருகே உள்ள வில்லுக்குறி, மேலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (வயது 48). இவர் சம்பவத்தன்று தனது டெம்போவில் திருநெல்வேலியில் இருந்து வைக்கேல் ஏற்றிகொண்டு களியக்காவிளைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அன்று மாலை தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி, அழகரம்மன் கோவில் அருகில் சாலையோரம் டெம்போவை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் நள்ளிரவு 2 மணிக்கு திடீரென டெம்போவில் இருந்த வைக்கோல் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இத்தகவல் அறிந்த தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் மளமளவென எரிந்துகொண்டிருந்ததால், திங்கள்நகர் தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. பின்னர் இரண்டு வாகனங்களில் இருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடித்து, சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. ஆனாலும் இந்த தீ விபத்தில் வைக்கோல் மற்றும் டெம்போவின் உள்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து டெம்போ டிரைவர் ஜெகன் ராஜ் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.