மின்கம்பியில் உரசி டிராக்டரில் இருந்த வைக்கோல் தீப்பிடித்தது

மோகனூர் அருகே மின்கம்பியில் உரசி டிராக்டரில் இருந்த வைக்கோல் தீப்பிடித்தது.

Update: 2023-03-14 18:45 GMT

மோகனூர்

மோகனூர் அருகே உள்ள பேட்டப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மணியங்காளிபட்டியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. விவசாயி, இவர் கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியில் இருந்து கால்நடைகளுக்காக தனது டிராக்டரில் டிப்பரை மாட்டி வைக்கோல் வாங்கி ஏற்றிக்கொண்டு மணியங்காளிபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவந்தூர் அருகே வந்தபோது அங்கு நடைபெறும் திருவிழாவினால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ஒருவந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே சென்று கொண்டிருந்த போது மேலே சென்ற மின்கம்பி வைக்கோலில் உரசியதாக தெரிகிறது. இதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. அதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்து டிராக்டரில் இருந்த வைக்கோல்களை கீழே தள்ளி அப்புறப்படுத்தினா். இருப்பினும் வைக்கோல்கள் மேலும் கொழுந்துவிட்டு எரிந்தன. இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் நாமக்கல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வைக்கோலில் மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தடுத்தனா். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்