நிம்மியம்பட்டு மருத்துவமனை எதிேர தேங்கி நின்ற மழைநீர் உடனடியாக அகற்றம்

நிம்மியம்பட்டு மருத்துவமனை எதிேர தேங்கி நின்ற மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது.

Update: 2023-05-05 18:45 GMT

வாணியம்பாடி

நிம்மியம்பட்டு மருத்துவமனை எதிேர தேங்கி நின்ற மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது.

ஆலங்காயம் ஒன்றியம் நிம்மியம்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் மழைநீர் சாலையில் தேங்கியது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வந்து ெசல்லும் நோயாளிகள் மற்றும் பார்ைவயாளர்கள் அவதிப்பட்டு வந்தனர். மருத்துவமனை முன்பு தேங்கி நின்ற மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிம்மியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி வெங்கடேசன் துரிதமாக செயல்பட்டு பொக்லைன் எந்திரம் மூலமாக கால்வாய் தோண்டி மழைநீரை வெளியேற்றினார். இந்தப் பணியை ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பசுபதி ஆகியோர் பார்வையிட்டனர்.

உடனடியாக பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாகவும், பொது மக்களின் சார்பாகவும் பாராட்டு ெதரிவிக்கப்பட்டது. இப்பணியின் போது ஒன்றியக்குழு உறுப்பினர் பிரீத்தா பழனி, துணைத் தலைவர் மணி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்