ஊராட்சி துணை தலைவியின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே ஊராட்சி துணை தலைவியின் மகன் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் தீவிர விசாரணை
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெய்வனை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் செல்வம்(வயது 30). இவரது தாயார் ராணி அதே கிராமத்தில் ஊராட்சி துணை தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று செல்வம் அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து செல்வத்தின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.