முட்டைகளை விழுங்கிய பாம்பு பிடிபட்டது

முட்டைகளை விழுங்கிய பாம்பு பிடிபட்டது.

Update: 2022-11-18 19:32 GMT

அன்னவாசல்:

இலுப்பூர் அருகே உள்ள மருதம்பட்டியை சேர்ந்தவர் சித்ரா. இவரது வீட்டின் மாட்டுக் கொட்டகையில் கோழி அடையில் முட்டைகளை வைத்துள்ளார். இந்தநிலையில் சித்ரா அங்கு சென்று பார்த்தபோது நாகப்பாம்பு ஒன்று அடைக்கு வைத்திருந்த முட்டைகளை விழுங்கி கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இது பற்றி இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள், கோழி அடையில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் அடைத்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்