வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
வத்தலக்குண்டுவில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
வத்தலக்குண்டு தங்கமலை அடிவாரத்தில் உள்ள காமராஜபுரத்ைத சேர்ந்தவர் முருகன். நேற்று இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த முருகன் உடனே வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் படைவீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி வீட்டுக்குள் பதுங்கி இருந்த 4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.