வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

Update: 2023-06-01 19:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் கீழ்கைத்தளா கிராமத்தில் உள்ள வீரம்மாள் என்பவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அந்த பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். மேலும் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டு எடுத்துச்சென்று அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், பிடிபட்ட பாம்பு சுமார் 6 அடி நீளமுள்ள மலை பிரதேசங்களில் அதிகம் காணப்படும் மலை மோதிர வளைய பாம்பு என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்