வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
நொய்யல் அருகே வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டுள்ளது.
புகழூர் பசுபதிநகர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி செல்லக்கனி. இவர்களது வீட்டிற்குள் நேற்று 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சாரைப்பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
இதேபோல் தவிட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. அதை பார்த்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து அங்கு வந்து பார்த்தபோது அங்கு இருந்த நாகப்பாம்பு மாயமாகியது. வெகு நேரம் தேடியும் பாம்பை கண்டுபிடிக்க முடியாததால் தீயணைப்பு வீரர்கள் திரும்பி சென்றனர்.