வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

சீர்காழி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

Update: 2022-06-28 17:52 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே செம்மங்குடி கிராமம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் ஓய்வு பெற்ற கண்டக்டர். இவருடைய வீட்டுக்குள் நேற்று இரவு பாம்பு ஒன்று புகுந்தது.இதுகுறித்து பாம்பு பிடிக்கும் பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாண்டியன் அங்கு வந்து வீட்டுக்குள் பதுக்கியிருந்த 7 அடி நீளமுள்ள சாரப்பாம்பை பிடித்தார் இதனையடுத்து கலிய மூர்த்தி குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். பிடித்த பாம்பை பாண்டியன் வனப்பகுதியில் விட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்