வேணுவனேஸ்வரி அம்மன் சிலையின் தலையில் சுற்றி இருந்த பாம்பு
வேணுவனேஸ்வரி அம்மன் சிலையின் தலையில் பாம்பு சுற்றி இருந்தது.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள சிவன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி அங்கு கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கோவிலில் வேணுவனேஸ்வரி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை கொலுவில் வைக்கப்பட்டிருந்த வேணுவனேஸ்வரி அம்மன் சிலையின் தலையில் ஒரு மலைப்பாம்பு சுற்றியபடி இருந்தது. இதைப்பார்த்த அங்கிருந்த பக்தர்கள் உடனே திருமயம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்குவந்த தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை பிடித்து சென்றனர். அம்மன் சிலையில் மலைப்பாம்பு சுற்றி இருந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.