ரேஷன் அரிசியை கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசியை கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போஸ்நகரை சேர்ந்தவர் மாணிக்கராஜா (வயது44). இவர் விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார், மாணிக்கராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடக்கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டிக்கு பரிந்துரைத்தனர். அதன்பேரில் கலெக்டர் மேகநாத ரெட்டி, மாணிக்கராஜாவை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மாணிக்கராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.