குப்பையில் கிடந்த மண்டை ஓடு: துப்புரவு ஊழியர்கள் அதிர்ச்சி

உடனடியாக நகராட்சி ஊழியர்கள், திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Update: 2023-08-24 18:45 GMT

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட கொத்த தெரு பகுதியில் உள்ள மகாகாளியம்மன் கோவில் அருகே வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் திருவாரூர் நகராட்சியை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் நேற்றுமுன்தினம் குப்பை அள்ளும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பையில் மண்டை ஓடு ஒன்று கிடந்தது. இதனை பார்த்த துப்புரவு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக நகராட்சி ஊழியர்கள் திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டை ஓட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த இடத்திற்கு அருகில் சுடுகாடு அமைந்துள்ளதால் மண்டை ஓட்டினை நாய் இழுத்து வந்து போட்டிருக்கலாம் என்றும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதற்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் இதுபோன்று மண்டை ஓட்டை நாய் இழுத்து வந்து போட்டதும் தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் இந்த மண்டை ஓட்டை வந்து பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்