மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

ஆரணி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-21 13:10 GMT

ஆரணி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுபவரிடம் விசாரணை என்ற பெயரில் நீண்ட காலமாக பெற்று வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டதை கண்டித்து இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்களிடம், அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில் தற்போது ஆதார் கார்டு, சொத்து விவரங்கள் அனைத்தும் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தானாகவே ஆன்லைன் மூலம் உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது. இருந்தாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த தர்ணா போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்