வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-30 18:43 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இந்த பேரூராட்சியின் மேலப்பாளையம் 6-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பாதி தூரம் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு மீதி தூரம் முழுமையாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 4 நாட்களாக பணிகள் நடைபெறததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் போது எடுக்கப்பட்ட படிக்கட்டுகள் இல்லாமல் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரூராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி தலைவர் தவமணி முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்