முற்றுகை போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்தது
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்தது
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு 3-வது நாளாக முற்றுகை போராட்டத்தை நேற்றும் தொடர்ந்தனர். இதற்கிடையில் சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ் விருதுநகர் வருகை தரவுள்ள நிலையில் அவருடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.