ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் தென்கடல் பகுதியில் நேற்று மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 2.8 மில்லியன் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தமிழ்மணி தலைமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மூத்த விஞ்ஞானி ஜான்சன், மண்டபம் மீன் துறை உதவி இயக்குனர் காதர் ஜெய்லானி உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.