கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது

நாகையில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது

Update: 2022-10-23 18:45 GMT

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை களையிழந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாகை மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. புதிய துணிகள் எடுக்கவும், பொருட்கள் வாங்கவும், பட்டாசு வாங்கவும் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்