நெல்லையில் கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நெல்லையில் கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-10-16 18:41 GMT

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி நெல்லையில் கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம் ஆகும்.

இதற்கான முன்னேற்பாடு பணிகளை இப்போதே மக்கள் தொடங்கி விட்டனர். தீபாவளிக்கு இன்னும் 1 வாரமே இருப்பதால் புத்தாடை எடுத்தல் மற்றும் பலகாரங்கள், இனிப்புகள் தயார் செய்வதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை தொடங்கி உள்ளனர்.

ஜவுளி கடைகளில் கூட்டம்

நேற்று விடுமுறை நாள் என்பதால் நெல்லையில் ஜவுளி கடைகளுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். நெல்லை டவுன் வடக்கு ரதவீதி, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் குவிந்தனர். குறிப்பாக குழந்தைகள்இன்று முதல் பள்ளிக்கு சென்று விடுவார்கள் என்பதால் அவர்களை நேற்று ஜவுளி கடைகளுக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு பிடித்தமான புத்தாடைகளை வாங்கி கொடுத்தனர்.

மேலும் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆடையகங்களிலும் கூட்டம் அதிகரித்து இருந்தது.

போலீஸ் பாதுகாப்பு

இதையொட்டி டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்ைட மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. கார், மோட்டார் சைக்கிள்களின் போக்குவரத்தும் அதிகரித்து இருந்தது.

பொது மக்களின் கூட்ட நெரிசல், வாகன போக்குவரத்து ஆகியவற்றை ஒழுங்கு படுத்தும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்