குடிநீர் இணைப்புக்கு பங்குத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புக்கு பங்குத்ெதாகையை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-03 18:25 GMT


ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்புக்கு பங்குத்ெதாகையை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஜல்ஜீவன் திட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக குடியிருப்புகளுக்கும் வீடுகள்தோறும் குடிநீர்‌ குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2020-21-ம் ஆண்டு இந்த திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 79 கிராம ஊராட்சிகள் (அரக்கோணம்-12, ஆற்காடு-13, காவேரிப்பாக்கம்-4, நெமிலி-18, சோளிங்கர்-11, திமிரி-12‌ மற்றும் வாலாஜா-9) தேர்வு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய் இணைப்பிற்கு பொதுமக்கள் பங்குத்தொகையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்‌ குடியிருப்பு குக்கிராமங்களுக்கு ரூ.600 மற்றும் பொது பிரிவு குடியிருப்பு குக்கிராமங்களுக்கு ரூ.1,200 தொகையும் செலுத்த வேண்டும்.

உடனடியாக செலுத்த வேண்டும்

இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்கள் இதுநாள் வரையில் தங்களது பங்குத்தொகையினை செலுத்தாதவர்கள் அதற்கான தொகையினை தங்களது ஊராட்சியில் உள்ள ஊராட்சி கணக்கில்‌ செலுத்தி அதற்கான ஒப்புதலை பெற்று கொள்ள வேண்டும்.

மேலும் 2022-23-ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 5 கிராம ஊராட்சிகள் (அரக்கோணம்- 17 பணிகள்) தேர்வு செய்யப்பட்டு வீடுதோறும் குடிநீர் வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இதற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சியில் உள்ள பயனாளிகள் பங்குத் தொகையினை உரிய கணக்கில் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் முன்கூட்டியே செலுத்தி, அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்