பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் ஓடிய கழிவுநீர்

நெல்லை டவுனில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடியது.

Update: 2022-09-21 19:55 GMT

நெல்லை டவுன் குறுக்குத்துறை ரோடு புறவழிச்சாலையில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது நெல்லை மாநகரில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பேட்டையில் 4 வயது சிறுமி ஒருவரும், பாளையங்கோட்டையில் 11 மாத குழந்தையும் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் தாய்மார்கள், முதியவர்கள் அனைவரும் அச்சப்படுகிறார்கள். எனவே இதனை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்