நத்தம் மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த பாம்பு

நத்தம் மாரியம்மன் கோவிலுக்குள் பாம்பு புகுந்தது.

Update: 2022-09-11 16:18 GMT


நத்தம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது கோவிலின் பின்புற சுவர் பகுதியில் நல்லபாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதைப்பார்த்ததும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் அதிர்ச்சியில் அலறியடித்தபடி கோவிலைவிட்டு வெளியே ஓடிவந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அந்த பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அது கோவில் அருகில் உள்ள ஒரு புதருக்குள் புகுந்து தப்பி விட்டது. பாம்பு கோவிலுக்குள் புகுந்ததை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது, வைரலாக பரவி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்