காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

குரங்கணி செங்கல்சூளையில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-20 18:45 GMT

தென்திருப்பேரை:

குரங்கணி செங்கல்சூளையில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு காவலாளி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் அய்யப்பன் (வயது 52). இவர், ஏரல் அருகே உள்ள குரங்கணியில் உள்ள தனியார் செங்கல்சூளையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியும் மாரி சங்கர் (24), இசக்கி ராஜா (18) என்ற மகன்களும் உள்ளனர்.

தற்போது அய்யப்பன் ஏரல் அருகில் உள்ள அம்மாள் தோப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், அய்யப்பன் நேற்று முன்தினம் இரவு காவல் பணிக்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தூக்கில் தொங்கினார்

நேற்று காலையில் செங்கல் சூளைக்கு பணியாளர்கள் வந்தபோது, அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த பணியாளர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அய்யப்பன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அருகில் அவர் எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் கடிதத்தில் எழுதியுள்ள காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குரங்கணி செங்கல்சூளையில் இரவு காவலாளி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்