தக்கலை அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-28 19:14 GMT

தக்கலை, 

தக்கலை அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது60). இவருக்கு ஷீனா (50) என்ற மனைவியும், அஜூ ( 26) என்ற மகனும் உள்ளனர். வேணுகோபால் தக்கலை அருகே உள்ள ஒரு கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் மனைவியும், மகனும் வெளியே சென்றனர்.

பின்னர் வீட்டில் தனியாக இருந்த வேணுகோபால் மாடியில் தூக்கில் தொங்கினார். அப்போது வீட்டுக்கு வந்த மகன் அஜூ இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே வேணுகோபாலை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்