வீட்டின் முன்பு இருந்த இருக்கைகள் சேதம்

வீட்டின் முன்பு இருந்த இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன.

Update: 2023-04-06 19:15 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் புல்வாய்க்கரை ஊராட்சி, நேர்த்தியாயிருப்பு கிராமத்தில் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேர்த்தியாயிருப்பு கிராமத்தில் நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தின் போது ஒரு சிலர் பிரச்சினை செய்ததாகவும் ஊர் பெரியவர்கள் சத்தம் போட்டதால் பிரச்சினை செய்த நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் நேர்த்தியாயிருப்பு கிராமத்தை சேர்ந்த குருசாமி என்பவரது வீட்டின் முன்பு இருந்த கல்லால் ஆன இருக்கைகளை நள்ளிரவு உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து குருசாமி அளித்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்