சாலையில் கிடந்த ரூ.1 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி ஆசிரியர்
சாலையில் கிடந்த ரூ.1 லட்சத்தை உரியவரிடம் பள்ளி ஆசிரியர் ஒப்படைத்தார்.
திருச்சி தீரன்நகர் பகுதியை சேர்ந்தவர் டோமினிக். இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் உயிரியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தீரன்நகர் பாரதியார் நலச்சங்கம் அருகே சென்ற போது சாலையில் ஒரு பை கிடந்தது. உடனே டோமினிக் அதை எடுத்து பார்த்த போது, அதில் ரூ.1 லட்சம் மற்றும் நில ஆவணங்கள் இருந்தன. அதில், இனியானூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற முகவரி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை தேடி கண்டுபிடித்து அவரிடம் அந்த பணத்தையும், ஆவணங்களையும் அவர் ஒப்படைத்தார். அவரை பொதுமக்கள் பாராட்டினர்.