சாத்தியார் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது

தொடர் மழையால் சாத்தியார் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-11-06 20:05 GMT

அலங்காநல்லூர்,

தொடர் மழையால் சாத்தியார் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அணை நிரம்பியது

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இந்த அணை 29 அடி கொள்ளளவு ெகாண்டதாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு வகுத்து மலை, செம்பூத்துமலை, சிறுமலை தொடர்ச்சி, மற்றும் மஞ்சமலை பகுதிகளில் இருந்து நீர்வரத்து வரும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி இந்த அணை அரசு உத்தரவுப்படி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 100 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. அதே நேரத்தில் மழையால் அணைக்கு நீர்வரத்தும் வந்து கொண்டு இருக்கிறது.

இது பற்றி பாசன விவசாய சங்கத்தலைவர் ரமேசன் செல்வராஜ் கூறியதாவது:-

தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் சிறுமலை தொடர்ச்சியிலிருந்து நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பாசன கண்மாய்கள் நிரம்பி உள்ளன.இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மானாவாரியாக விதைப்பு செய்யப்பட்ட மொச்சை உள்ப பயறு வகைகள், பலன் தரும் மரங்கள் செழிப்புடன் காணப்படுகிறது. இன்னும் விவசாயிகள் எதிர்பார்த்த கனத்த மழை பெய்யவில்லை. மழை பெய்யும் என நம்புகிறோம். இந்த அணையிலிருந்து வெளியேறும் உபரி தண்ணீர் அலங்காநல்லூர் கேட்டுகடை சாத்தியார் கால்வாய் வழியாக சென்று மதுரை வைகை ஆற்றில் போய் கலக்கிறது,

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்