உப்பளங்கள் மூழ்கின

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையினால் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது

Update: 2022-11-05 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையினால் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

பரவலாக மழை

தமிழகத்தில் கடந்த 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.தூத்துக்குடியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணி அளவில் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் அரை மணி நீடித்தது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்பவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

தண்ணீர் தேங்கியது

மழையினால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரெயின்ட் நகர், அண்ணா நகர், டூவிபுரம், லூர்தம்மாள்புரம், திரேஸ்புரம், சிதம்பரநகர், ராஜீவ் நகர், தபால் தந்தி காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி, குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் தற்காலிக பஸ் நிலையம் மழை நீரினால் சேரும் சகதியுமாக காட்சி அளித்தது. அதில் பயணிகள் மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றனர். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையினால் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான சுமார் 22 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்-உடன்குடி

திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் தொடர்ந்து லேசான மழை பெய்து கொண்ே்ட இருந்தது.

இதனால் பகத்சிங் பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் பகுதி, தெருக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

உடன்குடி

உடன்குடி வட்டார பகுதிகளில் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

உடன்குடி வட்டாரத்திற்கு உட்பட்ட கொட்டங்காடு. ஞானியார்குடியிருப்பு, உதிரமாடன்குடியிருப்பு, கந்தபுரம், மாடவிைள, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, சிறுநாடார்குடியிருப்பு, பெரியபுரம், மணப்பாடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி, சீர்காட்ச்சி, பிச்சிவிளை, நயினார்பத்து, நயினார் புரம், சுதந்திரநகர், பரமன்குறிச்சி, அத்தியடி தட்டு, வட்டன்விளை, செட்டியாபத்து, வேப்பங்காடு. லட்சுமிபுரம், மெய்யூர், பிறைகுடியிருப்பு, மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று மதியம் 12 மணிவரை விட்டுவிட்டு லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பஜார் வீதி, தெருக்களில் மழைநீர் தேங்கியது.

இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்