போதைப் பொருட்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்

போதைப்பொருட்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தினார்.

Update: 2022-11-01 17:40 GMT

போதைப்பொருட்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தினார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

குடியாத்தம் துணை கோட்டத்துக்கு உட்பட்ட பரதராமி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகள், நாட்குறிப்புகள், வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் போலீசாரிடையே பேசியதாவது:-

மாவட்ட எல்லைப்புற பகுதியில் பரதராமி போலீஸ் நிலையம் இருப்பதால், சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும், சமூக விரோத செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

கட்டுப்படுத்த வேண்டும்

போதைப் பொருட்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தி, போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். வழக்குகளை விரைவு படுத்த வேண்டும். திருட்டு மற்றும் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அருண்காந்தி மற்றும் வேலூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு வந்துள்ள 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்