உடன்குடி பகுதியில் பலாப்பழம் விற்பனை மும்முரம்

உடன்குடி பகுதியில் பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2022-07-06 09:54 GMT

உடன்குடி:

உடன்குடி பகுதியில் கோடைகால சீசன் பழங்களின் விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக மாம்பழம், அண்ணாசி, தர்பூசணி, முந்திரி, கொய்யாபழம் உட்பட பல வகையான பழங்கள் வாகனங்களில் குவித்து வைத்து தெருக்களில் கூவி விற்கப்படுகிறது. உடன்குடி நகர வீதிகளிலும், பக்கத்து கிராம வீதிகளிலும் பலாப்பழங்களை மினி லாரி, தள்ளுவண்டி போன்ற பல்வேறு வாகனங்களில் குவித்து வைத்து ஒரு கிலோ ரூ.20-க்கு கூவி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. சில இடங்களில் சாைலஓரங்களில் பழங்களை குவித்து வைத்தும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பலாப்பழத்தை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்