புனிதர்களின் மின் தேர்ப்பவனி
குஜிலியம்பாறையில் கிறிஸ்தவ தேவாலய திருவிழாவையொட்டி புனிதர்கள் மின் தேர்ப்பவனி நடந்தது.
குஜிலியம்பாறையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ராயப்பர், சின்னப்பர் திருவிழா நடந்தது. இதையொட்டி திருவிழா திருப்பலியும், சமபந்தி விருந்தும் நடந்தது. ராயப்பர், சின்னப்பர் புனிதர்களின் மின் தேர்ப்பவனி குஜிலியம்பாறையில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து, மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. விழாவில் குஜிலியம்பாறை, பாளையம், ராமகிரி, கோவிலூர், தி.கூடலூர் ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.