தமிழ்நாடு முன்னேறாததற்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் தான் காரணம் - பாஜக தலைவர் அண்ணாமலை

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் அனைத்து பொய்களுக்கும் விடை கிடைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2023-07-15 07:00 GMT

சென்னை,

பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்த்தித்தார். அபோது அவர் கூறியதாவது,

தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பறிபோகியுள்ளது. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் அனைத்து பொய்களுக்கும் விடை கிடைக்கும். ஜிஎஸ்டி வந்த பின்னர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் முன்னேறுகிறது. தமிழகம் முன்னேறவில்லை என்றால் அதற்கு காரணம் ஜிஎஸ்டி அல்ல இங்குள்ள ஆட்சியாளர்கள் தான்.

எல்லாவற்றிற்கும் மத்திய அரசை குறை கூறக்கூடாது. மத்திய அரசை குறை கூறுவதை மட்டுமே தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் தமிழக அரசு எடுக்காத நடவடிக்கைகள் தான். தமிழகத்தில் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. தமிழகத்தில் நேர்மையான நியாயமான ஆட்சி வர வேண்டும் என சபதம் எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

தமிழ்நாடு முன்னேறாதத்திற்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் தான் காரணம் - பாஜக தலைவர் அண்ணாமலை




Tags:    

மேலும் செய்திகள்