வீட்டின் மேற்கூரை சுவர் இடிந்து பெண் படுகாயம்

வீட்டின் மேற்கூரை சுவர் இடிந்து பெண் படுகாயமடைந்தார்.

Update: 2023-02-27 19:45 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள இருப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுமதி (வயது 30). இவர், கடந்த 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சுமதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் சுமதிக்கு இடுப்பு, கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த உறவினர்கள் சுமதியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்