தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

மின்கசிவு காரணமாக தீயில் எரிந்து கூரை வீடு நாசம் அடைந்தது.

Update: 2023-04-09 19:15 GMT

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணந்தங்குடி மேலையூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது60). விவசாயி. இவரது மகன் வீரையன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணி செய்து வருகிறார். நேற்று பகலில் திடீரென ராஜேந்திரனின் கூரை வீடு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒரத்தநாடு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்