அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

சாத்தூரில் அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

Update: 2022-10-18 19:33 GMT

சாத்தூர், 

சாத்தூர் அம்மா உணவகத்தில் காலை, மதியம் என 2 வேலைகள் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு 8 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. அந்த மேற்கூரை மாலை நேரத்தில் பெயர்ந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே அம்மா உணவகத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்