கூரை வீடு தீயில் எரிந்து சேதம்

கொள்ளிடம் அருகே திருமுல்லை வாசலில் கூரை வீடு தீயில் எரிந்து சேதமடைந்தது

Update: 2023-05-21 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவில் உள்ள தங்கம்மாள் செல்வராஜ் என்பவரது கூரை வீட்டின் மேல் பகுதியில் மின் கம்பிகள் செல்கின்றது. காற்று வீசியதில் இந்த மின்கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பொறி குடிசை வீடுமீது விழுந்து எரிய தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனைபார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த துணிகள் மற்றும் உணவுப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார். அப்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார்,கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர்ஜெயப்பிரகாஷ் சீர்காழி மேற்கு ஒன்றியசெயலாளர் பிரபாகரன் ஊராட்சி மன்றதலைவர்கள் இளவரசன், நாகராஜ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மஞ்சுளாதேவி ரமேஷ்,மாலினி பூவரசன் மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்