ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம் அடைந்தது.

Update: 2022-08-22 18:37 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம் அடைந்தது.

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி மூர்த்தியூர் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகள் சங்கீதா (வயது 19). கடந்த 19-ந்தேதி முதல் இவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பச்சையப்பன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் திருமண கோலத்தில் அதே பகுதியில் உள்ள கதிரமங்கலத்தை சேர்ந்த ரவி என்பவரது மகன் கவுதம் (27) என்பவருடன் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் சங்கீதா தஞ்சம் அடைந்தார்.

விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததாகவும் கடந்த 19-ந்தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் இருதரப்பு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து பேசினார். பின்னர் அறிவுரை கூறி சங்கீதாவை காதல் கணவனுடன் அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்