ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

Update: 2023-02-16 18:23 GMT

ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் ஊராட்சி மைக்கேல்பட்டியை சேர்ந்தவர் தேவநேசன். இவரது மகள் ஜோஸ் ஆஸ்லி (வயது 22). பி.எட். பட்டதாரி. இவர் கடந்த 12-ந் தேதி வீட்டை விட்டு சென்று விட்டதாக ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் இவரது தந்தை புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த சின்னப்பன் மகன் லெனினும், ஜோஸ் ஆஸ்லியும் காதலித்து வந்தனர். இதையடுத்து லெனினும், ஜோஸ் ஆஸ்லியும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவரின் வீட்டிற்கும் தகவல் தெரிவித்தார். இ்ந்நிலையில் லெனின் வீட்டார் சமாதானம் தெரிவித்து எழுதி கொடுத்துவிட்டு காதல் ஜோடியை அழைத்து சென்றனர். பெண் வீட்டார் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று கொண்டு வீடு திரும்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்