காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Update: 2023-04-27 19:30 GMT

ஓமலூர்:-

தாரமங்கலம் அணைமேடு பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 24), டிப்ளமோ படித்துவிட்டு தாரமங்கலத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரும், சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருடைய மகள் நிவேதா (24) என்பவரும், சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒன்றாக படித்த போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மாலையில், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு இந்த காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி காதல் ேஜாடியை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்