பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள சவுளூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 24). கேரளாவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தர்மபுரி பகுதியை சேர்ந்த சோனி (20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு நேற்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.