சமூக மேம்பாட்டில் இளைஞர்கள் பங்கு மிக முக்கியமானது

சமூக மேம்பாட்டில் இளைஞர்கள் பங்கு மிக முக்கியமானது

Update: 2022-09-21 18:45 GMT

சமூக மேம்பாட்டில் இளைஞர்கள் பங்கு மிக முக்கியமானது என மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் கூறினார்.

தேசிய இளைஞர் விழா

திருவாரூர் நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் சமூகப்பணித்துறை, புதுடெல்லியில் உள்ள மதநல்லிணக்கத்திற்கான தேசிய அறக்கட்டளையுடன் இணைந்து தேசிய இளைஞர் விழா நேற்று தொடங்கியது. விழாவிற்கு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய இளைஞர் விழா தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, இளைஞர்களிடையே மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை பரப்புகிறது.

இளைஞர்கள் பங்கு மிக முக்கியமானது

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை புதுப்பிக்கும் திறன் இளைஞர்களுக்கு தான் உள்ளது. சமூக மேம்பாட்டில் இளைஞர்கள் பங்கு மிக முக்கியமானது. அதற்கு அவர்களின் அறிவையும், திறமையையும் பகிர்ந்து கொள்ள பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நிலையான வளர்ச்சிக்கான மதங்களுக்கிடையிலான உரையாடல் மற்றும் சமூக நல்லிணக்கம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

இதில் மத்திய பல்கலைக்கழகத்தின் சமூக பணித்துறை பேராசிரியரும், தலைவருமான சிகாமணி பன்னீர், மத நல்லிணக்கத்திற்கான தேசிய அறக்கட்டளையின் செயலாளர் மனோஜ் பந்த், உதவி செயலாளர் சவுரப் துபே, மத்திய பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சுலோச்சனா சேகர், சமூக அறிவியல் மற்றும் மனிதநேய பள்ளியின் டீன் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்